2022 Fifa final இல் நடந்தது என்ன?

உலக கிண்ணத்தை தன்வசப்படுத்திக் கொண்டது ஆர்ஜன்டீனா

✍️ கட்டாரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

✍️ 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

✍️ லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

✍️ இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்று மூன்றாவது முறை உலக கிண்ணத்தை தனதாக்கிக் கொள்ளும் நோக்குடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் களமிறங்கின.

✍️ போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

✍️ போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணிக்கு பெனால்டி கிடைத்தது.

✍️ இதனை சரியாக பயன்படுத்திய அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

✍️ இதனையடுத்து போட்டியில் 36 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி சார்ப்பில் 2 ஆவது கோலை Ángel Di María அடித்தார்.

✍️ அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 2 – 0 என ஆர்ஜன்டீனா முன்னிலை வகித்தது.

✍️ தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது பாதியில் இரு அணிகளும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

✍️ போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது.

✍️ இதனை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé கோல் அடித்து அசத்தினார்.

✍️ இதனையடுத்து விறுவிறுப்பாக சென்ற போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

✍️ அதனடிப்படையில் போட்டியின் 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 2 – 2 என்ற ரீதியில் சமநிலையில் இருந்தனர்.

✍️ இதனையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

✍️ இதன்போது போட்டியின் 108 நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி சார்ப்பில் அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்தார்.

✍️ இதனையடுத்து போட்டியின் 118 நிமிடத்தில் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

✍️ இதனையடுத்து மேலதிக நேர முடிவில் இரு அணிகளும் 3 – 3 என்ற ரீதியில் சமநிலையில் இருந்ததது.
இதனையடுத்து பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

✍️ இதில் 4 – 2 என்ற ரீதியில் ஆர்ஜன்டீனா அணி போட்டியில் வெற்றி பெற்றது.

✍️ இம்முறை கால்பந்து உலக கிண்ண தொடரில் 7 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தமைக்கான கோல்டன் பூட் விருதை kylian mbappé தனதாக்கி கொண்டுள்ளார்.

Design a site like this with WordPress.com
Get started